காஞ்சிபுரம்
" alt="" aria-hidden="true" />
உலக சிறுநீரக நாளை முன்னிட்டு
காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிறுநீரகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுநீரகம் போல் நின்று உலக சாதனையில் ஈடுபட்டனர்.
உலக சிறுநீரகம் நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சிறுநீரக நாள் முன்னிட்டு வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரிட்ஜ் தன்னார்வத் தொண்டு நிறுவனம், 6வது முறை உலக சாதனை முயற்சியை காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து உலக சிறுநீரக விழிப்புணர்வு நாளை கொண்டாடியது.
உலக சிறுநீரக விழிப்புணர்வு நாளையொட்டி சிறுநீரகம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து சிறுநீரக வடிவம் போல் கைகோர்த்து நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் 3 நிமிடம் 10 வினாடிகள் அசையாமல் நின்று உலக சாதனையில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஜெட்லி புத்தகம் ரெக்கார்டு சார்பில் உலக சாதனை சான்றிதழ்களை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் நீலாம்பிகை மற்றும் பேராசிரியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த தன்னார்வ அமைப்பு 6வது முறையாக உலக சாதனை முயற்சி நடத்தி வந்துள்ளனர். இதே போல விவசாயம், குழந்தை பாதுகாப்பு, தமிழ் வளர்ச்சி, கொரோனா மற்றும் பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு உள்ளிடைவைகள் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.